தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் கூட்டணி குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அதிமுக தலைமையிலான எங்கள் கூட்டணியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளரும் எடப்பாடி பழனிசாமி தான் என்பதால், அவருடைய கருத்தே இறுதியானது என்று அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 51 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல்கள் உண்மையில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
