உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு, 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடும் வயிற்று வலியால் துடித்தபடி வந்துள்ளார். அவரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அப்படியே உறைந்து போயுள்ளனர். அந்த நபரின் மலக்குடல் (Rectum) பகுதியில் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் முழுமையாக உள்ளே சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாட்டிலின் அளவு மற்றும் அது உருவாக்கியிருந்த ‘வேக்யூம்’ அழுத்தம் காரணமாக, அதைச் சாதாரணமாக வெளியே எடுக்க முடியாமல் மருத்துவர்கள் திணறினர்.

​தவறான பாலியல் சோதனை முயற்சியால் (Anal Erotism) நேர்ந்த இந்த விபரீதத்தால், அந்த நபரின் குடல் கிழிந்து உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட்டது. இறுதியில், இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மருத்துவர்கள் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து அந்த ஒரு லிட்டர் பாட்டிலை பத்திரமாக வெளியே எடுத்தனர். “வீட்டிலேயே இதை எடுக்க முயற்சி செய்திருந்தால் குடல் கிழிந்து செப்சிஸ் ஏற்பட்டு உயிர் போயிருக்கும்” என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது அந்த நபர் குணமடைந்து வரும் நிலையில், அவருக்கு உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.