உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி மாணவர்கள், ஒட்டுமொத்த தேசத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். 4-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 5 சிறுவர்கள் சேர்ந்து, வெறும் ₹6,000 செலவில் நிஜமாகவே வானில் பறக்கும் F-22 ராப்டர் போர் விமானத்தின் மாதிரியை உருவாக்கியுள்ளனர். பழைய மோட்டார், உடைந்த பொம்மை கார் பாகங்கள் மற்றும் தெர்மாகோல் போன்ற பொருட்களைக் கொண்டு இந்த அதிசயத்தைப் படைத்துள்ளனர்.
नवाचार की उड़ान: परिषदीय विद्यालय के बच्चों ने बनाया उड़ने वाला फाइटर जेट
कंपोजिट विद्यालय भिलावली (अकराबाद-अलीगढ़) के विद्यार्थियों ने वेस्ट मटेरियल (फिश बॉक्स थर्माकोल) एवं Basic electronics की सहायता से F-22 Raptor Fighter jet का मॉडल तैयार कर उसे सफलतापूर्वक उड़ाने का अभिनव… pic.twitter.com/JIfWrFGzen
— Department Of Basic Education Uttar Pradesh (@basicshiksha_up) March 13, 2026
இந்தச் சிறிய ரக விமானத்தை ரிமோட் மூலம் 1.5 கிலோமீட்டர் தூரம் வரை இயக்க முடியும் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்! தனியார் பல்கலைக்கழக மாணவர்களே செய்யத் தயங்கும் இந்தச் சாதனையை, அரசுப் பள்ளி மாணவர்கள் செய்திருப்பது சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. “சரியான வாய்ப்பு கிடைத்தால் அரசுப் பள்ளி மாணவர்களாலும் வானைத் தொட முடியும்” என்பதற்கு இந்தச் சிறுவர்களே நிஜமான உதாரணம்!
