சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணிக்குள் பயிற்சியாளர் பொறுப்பில் வரப்போகிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், “சுரேஷ் ரெய்னாவை ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிப்பது குறித்து பரவும் தகவல்களில் உண்மையில்லை இது ஒரு அடிப்படையற்ற வதந்தி” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சிஎஸ்கே அணியின் தற்போதைய பயிற்சியாளர் குழுவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேசமயம், அணியின் ஃபீல்டிங் பிரிவை வலுப்படுத்த இங்கிலாந்தின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் ஃபோஸ்டர் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் ‘சின்ன தல’ ரெய்னா பயிற்சியாளராக வருவார் என்ற நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது, இருப்பினும் அவர் ஒளிபரப்பு மற்றும் பிற வழிகளில் கிரிக்கெட் உலகோடு தொடர்ந்து பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
