அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சி மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவுக்கு மனைவியாக நடித்தது இவரை மக்களிடையே கொண்டு சேர்த்தது.
இடையில் தயாரிப்பாளராக களம் கண்டவருக்கு அந்த முயற்சி கைகொடுக்காததால், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். எனினும், சினிமாவில் தனக்கு நேர்ந்த ‘காஸ்டிங் கவுச்’ போன்ற கசப்பான அனுபவங்கள் மற்றும் ஒரு பிரபல பத்திரிகையில் தன்னைப்பற்றி அவதூறாக வந்த செய்திகள் தன்னை மிகவும் காயப்படுத்தியதாக சமீபத்திய பேட்டியில் உருக்கமாகத்தெரிவித்துள்ளார்.
குசேலன் படத்திற்கு பிறகு வடிவேலுவுடன் இணைந்து நடிக்க சுமார் 16 பட வாய்ப்புகள் வந்தும், அவற்றை சோனா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தன்னால் வடிவேலுவைச் சமாளிக்க முடியவில்லை என்றும், சுயமரியாதை என்பது தனக்கு மிகவும் முக்கியம் என்றும் அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சினிமாவில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வரும் சோனாவின் இந்தப் பரபரப்புப் பேச்சு இணையதளங்களில் வைரலாகி வருகிறத
