இளம் இசைக்கலைஞர் சாய் அபயங்கரின் புதிய படைப்பான “பவழ மல்லி” பாடல் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சாதனையைப் படைத்து வருகிறது.
இந்தப் பாடல் வெளியான வெறும் 24 மணி நேரத்திலேயே யூடியூப் தளத்தில் 7.6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
நடிகை கயாடு லோஹருடன் இணைந்து சாய் அபயங்கர் ஆடியுள்ள இந்தத் துள்ளலான நடனப் பாடல், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.
ஏற்கனவே இவரது முந்தைய பாடல்கள் ஹிட் அடித்த நிலையில், தற்போது “பவழ மல்லி” பாடலும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.
