ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வீரவல்லி அரசுப் பள்ளியில், கழிவறை அருகே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவனை Lab உதவியாளர் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன் Lab உதவியாளரைத் தாக்கியுள்ளான். இந்த மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
Class X student assaults lab assistant at ZP High School in Andhra after being caught smoking near school toilets. pic.twitter.com/oX4vh0xweE
— News Algebra (@NewsAlgebraIND) March 5, 2026
தகவலறிந்த காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவன் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த அதிகாரிகள், அவர்களுக்குத் தீவிர ஆலோசனைகளையும் (Counseling) எச்சரிக்கையையும் வழங்கினர். பள்ளி ஊழியர் மீதான இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
