பஞ்சாப் மாநிலம் கபூர்தலா நகரில், மருமகளிடம் தவறாக நடக்க முயன்ற மாமனார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, தனது கணவருடன் மாமனார் வீட்டிலேயே வசித்து வருவதாகவும், ஆனால் மாமனார் முகேஷ் என்பவர் தன்னிடம் தொடர்ந்து ஆபாசமாக நடந்து கொள்வதோடு, பாலியல் ரீதியாகத் தவறான முறையில் தொட்டு அத்துமீறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாமனாரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அந்தப் பெண், தனது பாதுகாப்பிற்காக வீட்டிற்குள்ளேயே சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளார்.

இந்நிலையில், அந்தப் பெண் வீட்டின் வரவேற்பு அறைக்கு வரும்போதெல்லாம் மாமனார் அங்கு வந்து அவரிடம் அநாகரீகமாக நடந்துகொள்வதும், அவரது பின்புறத்தில் தட்டித் தவறான முறையில் தொடுவதும் சிசிடிவி காட்சிகளில் உறுதியானது.

இது குறித்து அதிகாரி பல்ஜித் சிங் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் தஷ்மேல் காலனியைச் சேர்ந்த முகேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தந்தை ஸ்தானத்தில் இருக்க வேண்டிய மாமனாரே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.