மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் ரவிச்சந்திரன், சிவகாசியில் புதன்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு கோடை வெயில் மிக அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

குறிப்பிட்ட சில நாட்களில் வெப்ப அலை வீசும் என்றும், ஆனால் அது எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே துல்லியமாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கோடை காலத்தில் திடீரென மழை பெய்யும் போது, மின்னல் போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.