தஞ்சாவூர் தேர்தல் பரப்புரையின் இறுதியில் பேசிய விஜய், மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு நேரடி மாஸ் சவாலை முன்வைத்தார். “இங்கே ‘நாங்கதான்.. நாங்கதான்’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கூவும் யாராவது, தாங்கள் இதுவரை ஊழல் செய்யவில்லை என்றும், இனிமேல் செய்ய மாட்டோம் என்றும் மனசாட்சியோடு நெஞ்சைத் தொட்டுச் சொல்ல முடியுமா?” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மற்றவர்களின் போலித்தனத்தைச் சாடிய அவர், “ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாத நேர்மையான ஆட்சியைத் தர நாங்கள் தில்லாகவும் உண்மையாகவும் முயற்சி செய்வோம்” என்று உறுதியளித்தார்.

​வெறுமனே விளம்பரத்திற்காகப் பல கோடி ரூபாய் முதலீடு அல்லது ஒப்பந்தம் என்று பொய்க் கணக்குகளைக் கூற மாட்டேன் என்று அவர் தெரிவித்தார். அதற்குப் பதிலாக, தமிழகத்தின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து முறையாக “வெள்ளை அறிக்கை” வெளியிட்டு, உண்மையான மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று தஞ்சை மண்ணில் முழங்கினார். விஜய்யின் இந்தத் தில்லான பேச்சு, பழைய அரசியல் முறையை வேரோடு அறுக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.