தஞ்சாவூர் தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், ரேஷன் கடைகளில் நிலவும் குளறுபடிகளுக்குத் தனது பாணியில் தீர்வுகளை முன்வைத்தார். “மக்களின் வசதிக்காக 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு கடை என்ற வீதத்தில் புதிய கடைகள் திறக்கப்படும். இதன் மூலம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவதி குறையும்” என்று அவர் உறுதியளித்தார். மேலும், ரேஷன் கடைகளில் பணிபுரிபவர்களை முறைப்படுத்தும் விதமாக, “பெண்களுக்குப் பெண் எடையாளர் மற்றும் ஆண்களுக்கு ஆண் எடையாளர்” என நியமிக்கப்படுவார்கள் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

​ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்துப் பேசிய அவர், “அரிசியைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் சுகாதாரமான முறையில் பாக்கெட் செய்யப்பட்டு வினியோகிக்கப்படும்” என்று தெரிவித்தார். இதன் மூலம் பொருட்களில் கலப்படம் செய்வது மற்றும் எடைக் குறைப்பு போன்ற முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க முடியும் என்று அவர் விளக்கினார். மக்களின் அடிப்படைத் தேவைகளான ரேஷன் பொருட்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதே தவெக-வின் லட்சியம் என்று தஞ்சை மண்ணில் முழங்கினார்.