தஞ்சாவூர் தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், ஏழை விவசாயிகளின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் புரட்சிகரமான கல்வித் திட்டத்தை அறிவித்தார். “2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்ற கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள், பொறியியல் (Engineering) அல்லது மருத்துவம் (Medical) என எந்த உயர் படிப்பைப் படித்தாலும், அவர்களின் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கும்” என்று மிக முக்கியமான உறுதிமொழியை அளித்தார். இதன் மூலம் ஏழைக் குடும்பங்களின் கனவுகள் நனவாகும் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

​இந்தத் திட்டம் குறிப்பாக அரசு ஊழியர்களாக இல்லாத விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்று விஜய் தெரிவித்தார். “கல்விக்கும் மருத்துவத்திற்கும் தான் எனது ஆட்சி முதல் முக்கியத்துவம் கொடுக்கும்” என்று உறுதியளித்த அவர், ஏழை எளிய மக்களின் முன்னேற்றமே தவெக-வின் லட்சியம் என்று தஞ்சை மண்ணில் முழங்கினார். விஜய்யின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையேயும், விவசாயக் குடும்பங்களிடையேயும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.