தஞ்சாவூர் தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், விவசாயிகளின் நலனுக்காக மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். “5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். அதேபோல், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் உறுதியளித்தார். விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதே தவெக-வின் முக்கிய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆளுங்கட்சியான திமுக-வை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய அவர், “எல்லாருக்கும் என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, பிறகு தகுதி என்ற பெயரில் பாகுபாடு காட்டி மக்களை நாங்கள் ஏமாற்ற மாட்டோம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
