2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வரும் மார்ச் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன.
இந்தப் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மும்பை தெருவோரக் கடை ஒன்றில் முடி திருத்தம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீண்டகாலமாக மும்பை வரும்போதெல்லாம் தெருவோரக் கடைகளில் முடி திருத்தம் செய்வதை வழக்கமாக வைத்துள்ள வாகன், இம்முறையும் தனது பழைய நண்பரான தீன்தயாள் சர்மாவிடம் முடி வெட்டிக்கொண்டு அவரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக ஹாரி புரூக் அதிரடி சதமடித்து அணியை வழிநடத்துகிறார். மறுபுறம் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றாலும், பின்னர் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளை வீழ்த்தி பலமாக மீண்டு வந்துள்ளது.
You never know what you’ll find walking the streets of Mumbai… 💇♂️ #BBCCricket pic.twitter.com/fJKHj3vmoI
— Henry Moeran (@henrymoeranBBC) March 3, 2026
“>
சஞ்சு சாம்சன் 97 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். தற்போது மும்பையில் நடைபெறவுள்ள இந்த முக்கியமான அரையிறுதிப் போட்டியைச் சந்திக்க இரு அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.
