டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர கொலைச் சம்பவம் தலைநகரையே அதிர வைத்துள்ளது. 21 வயதான ரித்திக் வர்மா என்ற இளைஞர், திருமணமான ஒரு பெண்ணுடன் கடந்த சில மாதங்களாக ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், திங்கட்கிழமை காலை அந்தப் பெண்ணின் வீட்டிற்கு ரித்திக் சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது கணவர் அங்கு வந்துள்ளார். தனது மனைவியுடன் ரித்திக் இருப்பதைப் பார்த்துக் கோபத்தின் உச்சிக்குச் சென்ற கணவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ரித்திக்கை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளார்.
ரித்திக்கின் கை விரல் நகங்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எறிந்து, உடல் முழுவதும் பலத்த காயங்களை ஏற்படுத்திச் சித்ரவதை செய்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரித்திக், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு டெம்போ டிரைவராகவும், தனது பெற்றோருக்கு ஒரே மகனாகவும் இருந்த இளைஞர், இப்படி கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கணவனைத் தேடி வருகின்றனர்.
