2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி மிக மோசமாக செயல்பட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ச்சியாக நான்கு ஐசிசி தொடர்களில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்ததால், அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் தலா 50 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை வீரர்களின் சம்பளம் மற்றும் போட்டி ஊதியத்திலிருந்து நேரடியாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது திருப்புமுனையாக அமைந்தது. சூப்பர்-8 சுற்றில் நியூசிலாந்துடனான போட்டி மழையால் ரத்தானதும், இங்கிலாந்திடம் தோற்றதும் அவர்களின் வெளியேற்றத்தை உறுதி செய்தது.
🚨 FINE FOR PAKISTANI PLAYERS. 🚨
– PCB set to take a fine of 50 Lakh from each player for their incompetence at the T20 World Cup. (Express Tribune). pic.twitter.com/NJd9Q892GO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 2, 2026
“>
திறமையை வெளிப்படுத்தாவிட்டால் அதற்குரிய விலையை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கடுமையான செய்தியை பிசிபி இந்த அபராதத்தின் மூலம் வீரர்களுக்கு உணர்த்தியுள்ளது.
