வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு மாஸாக நுழைந்துள்ளது. 196 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, சஞ்சு சாம்சன் தனது அதிரடி ஆட்டத்தால் உயிர் கொடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து, இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் முடித்து, அடுத்தகட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

​அரையிறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. வரும் மார்ச் 5-ம் தேதி மும்பை வான்கேடே மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இங்கிலாந்து அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து ஒரு தரமான அணி என்றாலும், அவர்களை வீழ்த்த தேவையான அனைத்து வியூகங்களையும் இந்தியா கையாளும் என்றும், வான்கேடே போன்ற சவாலான மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.