தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையே கடும் இழுபறி நிலவுகிறது.

குறைந்தபட்சம் 35 தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் பிடிக்கும் நிலையில், 25 தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக முன்வந்துள்ளதால், உடன்பாடு ஏற்படாவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேற காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சூழலில் ஹைதராபாத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன், ஆதவ் அர்ஜூனா பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.