மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. மனோஜ் என்ற நபர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக அவரது மனைவிக்குத் தவறான தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் துயரச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்தப் பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால், அடுத்த நாள் காலை அந்தப் பெண்ணின் கணவர் மனோஜ் உயிருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து நின்றதைக் கண்டு அனைவரும் உறைந்து போயினர்.
உண்மையில் விபத்தில் சிக்கியது மனோஜ் அல்ல என்பதும், அடையாளம் காண்பதில் ஏற்பட்ட குளறுபடியால் ஒரு குடும்பமே சிதைந்து போனதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தவறான தகவலால் ஒரு தாய் மற்றும் இரண்டு பிஞ்சுயிர்கள் பறிபோன இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
