தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, அவரிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் இடையே இருக்கும் தொடர்புதான் இந்த முடிவுக்குக் காரணம் என்றும், இது தமக்கும் தன் குழந்தைகளுக்கும் மிகுந்த மனவேதனையை அளிப்பதாகவும் சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரியிருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், விஜய்யின் அரசியல் இமேஜைக் குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து விமர்சித்து வருகின்றன.
“தன் குடும்பத்தையே நிர்வகிக்க முடியாதவர் நாட்டை எப்படி வழிநடத்துவார்?” என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்ப, இது முழுக்க முழுக்க ஒருவரின் தனிப்பட்ட குடும்ப விஷயம் என்றும், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் தவெக வினயினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தேர்தலை முன்னிறுத்தி ஒரு ‘மெகா’ கட்சியின் தூண்டுதலால் தான் சங்கீதா தற்போது நீதிமன்றத்தை நாடியிருப்பாரோ என்ற சந்தேகத்தையும் விஜய் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.
