நவி மும்பையில் நடைபெற்று வரும் 20-வது டிஒய் பாட்டீல் டி20 கோப்பையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், இந்திய கடற்படை (Indian Navy) அணியை எதிர்த்து டிஒய் பாட்டீல் ப்ளூ (DY Patil Blue) அணி விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய கடற்படை அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்தக் கடினமான இலக்கை விரட்டிய டிஒய் பாட்டீல் ப்ளூ அணிக்கு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 19 பந்துகளில் 63 ரன்கள் (7 பவுண்டரி, 5 சிக்ஸர்) விளாசி அதிரடித் தொடக்கம் கொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இவர்களுடன் சர்ஃபராஸ் கானும் 27 ரன்கள் பங்களிப்பு செய்ய, டிஒய் பாட்டீல் ப்ளூ அணி 19.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.