சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணம் குறித்த பேச்சுகள் தான் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. நீண்ட நாட்களாக இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு விழாவில் இவர்களின் அம்மாக்கள் இருவரும் இணைந்து உற்சாகமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் “டான்ஸ் பின்னிட்டாங்களே” என்று ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு இருவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம், விரைவில் இவர்கள் வீட்டில் கெட்டிமேளம் கொட்டப்போவது உறுதி என்பதை சூசகமாக உணர்த்துவது போல் அமைந்தது.

இந்தக் கொண்டாட்டமான இரவு, இரு குடும்பங்களுக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை அப்பட்டமாக காட்டியுள்ளது. திரையுலகில் வெற்றிகரமான ஜோடியாக வலம் வரும் இவர்களின் நிஜ வாழ்க்கை பந்தத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்த வைரல் நடனம் மற்றும் களைகட்டிய கொண்டாட்டம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ‘ட்ரீட்’ ஆக அமைந்திருக்கிறது. ஒருவேளை இது திருமணத்திற்கான முன்னோட்டமாக இருக்குமோ என்று ரசிகர்கள் இப்போதே வாழ்த்துகளைக் குவிக்கத் தொடங்கிவிட்டனர்.