தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜயை விமர்சித்து பிக்பாஸ் பிரபலம் ஜூலி அடுத்தடுத்து இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பம் முதலே பல விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் ஜூலி, இப்போது விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துக் கருத்து தெரிவித்து தவெக தொண்டர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.
Thalapathi is not a soft target & TVK is not a punchbag !! @iMariaJuliana iv been your genuine well wisher over the years so this comes from a place of concern…
Speak but please think before you speak !How can you personally attack others when you yourself were a victim of… pic.twitter.com/gcVGFeRGJ0
— Sanam Shetty (@ungalsanam) February 25, 2026
இந்நிலையில், ஜூலியின் இந்தச் செயலுக்கு நடிகையும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான சனம் ஷெட்டி பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதுமே விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் சனம் ஷெட்டி, ஜூலியின் விமர்சனத்திற்குச் பதிலடி கொடுக்கும் வகையில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இதனால் பிக்பாஸ் பிரபலங்களுக்கு இடையிலான இந்த மோதல் இணையத்தில் இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
