உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தன்யாவுக்கும், சுமித்துக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. அதிகாலை 4 மணி முகூர்த்த நேரத்தில், மணப்பெண் வீட்டார் வளர்த்த நாய் தொடர்ந்து குரைத்ததால் எரிச்சலடைந்த மாப்பிள்ளை வீட்டு உறவினர் ஒருவர் அதன் மீது கல்லை எறிந்தார்.
இது இருவீட்டாருக்கும் இடையே பெரிய வாக்குவாதமாக மாறி, ஒருகட்டத்தில் கம்பு மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் மூன்று பேரின் மண்டை உடைந்து, போலீஸ் வரை புகார் சென்றதால் அந்த இடத்திலேயே திருமணம் நின்று போனது.
திருமணம் நின்றதால் நிலைகுலைந்த தன்யா, பின்னர் தைரியமாக மணமகன் வீட்டுக்கே சென்று பேசி அவர்களைச் சமாதானப்படுத்தினார். முதலில் மறுத்தவர்கள் பிறகு சம்மதித்ததால் அவர்கள் ஒன்று சேர்ந்தனர்.
இதற்கிடையே தன்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், தங்களுக்கு ஏற்கனவே ஜனவரி மாதமே பதிவுத் திருமணம் முடிந்துவிட்டதாகவும், தற்போது சடங்குக்காக நடந்த கல்யாணம் நின்றதைப் பற்றி தங்களுக்குக் கவலையில்லை என்றும் கூலாகப் பதிவிட்டது அனைவரையும் அதிரவைத்துள்ளது.
