இந்திய ரயில்களில் கூட்டம் என்பது சாதாரண விஷயம் என்றாலும், சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓடும் லோக்கல் ரயில் ஒன்றின் வாசலுக்கு அருகிலேயே, இரண்டு நபர்கள் அசத்தலாக ஒரு கயிற்றுக் கட்டிலைப் (खटिया) போட்டு, தங்கள் வீட்டு முற்றம் போல நிம்மதியாகப் படுத்து உறங்குகின்றனர். பொதுவாக ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் தரையில் அமர்ந்து செல்வதைப் பார்த்திருப்போம், ஆனால் ரயிலுக்குள்ளேயே கட்டில் போட்டுத் தூங்குவது என்பது இதுவரை யாரும் பார்த்திராத ஒரு விசித்திரமான காட்சியாக இருக்கிறது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் மற்ற பயணிகள் அவர்களை வினோதமாகப் பார்த்தபடி நிற்க, இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனர். இதைப்பார்த்து வியந்த நெட்டிசன்கள், இது இந்தியர்களின் அசாத்திய ‘ஜுகாட்’ (சாமர்த்தியம்) என்று ஒருபுறம் பாராட்டினாலும், ரயில்வே விதிகளை மீறி மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக மற்றொருபுறம் விமர்சித்து வருகின்றனர்.
