இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையை நேரில் கேட்கக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் மே மாதம் 30-ம் தேதி அன்று இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு க்யூட்டான போஸ்டரைப் பகிர்ந்துள்ள அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களை மேடையில் சந்திக்கத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

“ஃபிரம் ராஜா வித் லவ்” (From Raja with Love) என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த கச்சேரியில், முன்னணி இசைக்கலைஞர்களுடன் இணைந்து தனது சூப்பர் ஹிட் பாடல்களை அவர் இசைக்கவுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ilaiyaraaja (@ilaiyaraaja_offl)

இந்தத் தகவல் வெளியான நொடியில் இருந்தே இசைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளதோடு, டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கும் என ஆவலுடன் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.