தென்னிந்தியத் திரையுலகின் தற்போதைய ‘கனவுக்கன்னி’ மிருணாள் தாக்கூர், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் மீதான தனது அதீத அன்பை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

தனுஷின் ‘அசுரன்’ படத்தை பலமுறை பார்த்திருப்பதாகக் கூறியுள்ள அவர், தனுஷை ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் ஒரு பெரிய ‘கலைக்கூடம்’ என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தனுஷிடம் இருந்து ஒரு நடிகையாகக் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருப்பதாகவும், அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை என்றும் மிருணாள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனுஷ் – மிருணாள் கூட்டணி குறித்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மிருணாளே இப்படி ஓப்பனாகத் தனது ஆசையை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.