பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கையெழுத்து தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில், பாமக வழக்கறிஞர் பாலு ஒரு முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார்.

ராமதாஸ் தரப்பினர் செய்த சில தில்லுமுள்ளு வேலைகளை வெளியே சொன்னால் அது ‘ஐயாவையே’ (ராமதாஸ்) பாதிக்கும் என்பதால், அவர் மீதுள்ள மரியாதையால்தான் தாங்கள் அமைதி காப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றிருந்தால் ராமதாஸுக்கு அபராதமே விதிக்கப்பட்டிருக்கும் என்றும், இருப்பினும் ராமதாஸின் கையெழுத்தை யார் போட்டார்கள் மற்றும் அதற்கு அனுமதி கொடுத்த வழக்கறிஞர் யார் என்பதை அறிந்து நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் பாலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.