2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றுடன் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியுள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் இந்திய ரசிகர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கனடாவுக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பிறகு பேசிய அவர், இந்தியா முழுவதும் தங்களுக்குக் கிடைத்த ஆதரவு மறக்க முடியாதது என்றார். அகமதாபாத், டெல்லி மற்றும் சென்னை என தாங்கள் விளையாடிய அனைத்து மைதானங்களிலும் இந்திய ரசிகர்கள் திரளாக வந்து ஆதரவளித்ததாகவும், இது தங்களுக்குச் சொந்த நாட்டில் விளையாடுவது போன்ற உணர்வைத் தந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினாலும், இந்திய மண்ணில் தங்களுக்குக் கிடைத்த அன்பும் அங்கீகாரமும் மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்துள்ளதாக ரஷித் கான் புகழாரம் சூட்டியுள்ளார்.
