டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் 9 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஜோடி அபாரமாக விளையாடி அணியை மீட்டெடுத்தது.
குறிப்பாக அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் விளாசி அசத்தினார்.
நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத் மற்றும் வான் விக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து தற்போது விளையாடி வருகிறது.
