தமிழ் திரையுலகின் எவர்கிரீன் நாயகி தேவயானி, தனது மகள் இனியாவிற்காக மேடையிலேயே ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ‘காவாலையா’ புகழ் இசையமைப்பாளர் சாய் அபயங்கரிடம் பேசுகையில், “முன்பு உங்கள் அப்பா, அம்மாவிற்கு ரசிகர்களாக இருந்தோம்,

 

View this post on Instagram

 

A post shared by Coffee Date Polama (@coffeedatepolama)

இப்போது உங்களுக்கு ரசிகர்களாக இருக்கிறோம்” என நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், தனது மகள் இனியா நன்றாகப் பாடுவார் என்றும், அவர் சாய் அபயங்கரின் தீவிர ரசிகை என்றும் குறிப்பிட்ட தேவயானி, “என் மகளுக்கு உங்கள் இசையில் பாட ஒரு வாய்ப்பு இருந்தால் கொடுங்கள்” எனத் தாய் பாசத்துடன் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.