சமீபத்தில் நடிகர் விஷாலுடன் சென்றது குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு நடிகர் யோகி பாபு விளக்கமளித்துள்ளார். பிரியாணி சாப்பிடலாம் என்றுதான் விஷால் தன்னை அழைத்துச் சென்றதாகவும், அங்கு சென்ற பிறகுதான் அவர் சாமி கும்பிடுவதைப் பார்த்துத் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளிலும் தன்னை ட்ரோல் செய்ததாகவும், நடிகர் விஜய் கூட போன் செய்து இது குறித்துக் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
View this post on Instagram
“>
இருப்பினும், தமக்கும் விஷாலுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், இப்போதும் தாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்றும் ஒரு விருது வழங்கும் விழாவில் யோகி பாபு தெளிவுபடுத்தியுள்ளார்.
