சேலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சண்முகப்பிரியா, தனது காதலனின் மிரட்டல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. கௌதம் என்பவரைக் காதலித்து வந்த சண்முகப்பிரியா, அவரது குணம் மற்றும் நடத்தை பிடிக்காததால் காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கௌதம், “என்னைத் திருமணம் செய்யாவிட்டால் உன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை (Private Photos) இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன்” எனச் சண்முகப்பிரியாவைத் தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளார்.

​இந்தத் தொடர் மிரட்டலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சண்முகப்பிரியா, தற்கொலை செய்துகொள்ளும் முன் ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அதில், “அவனை வாழ விடாதீங்க” என்று தனது கடைசி ஆசையாகக் குறிப்பிட்டுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். புகைப்படங்களை வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சிதைக்க முயன்ற காதலனின் கொடூரமான முகமும், அதனால் ஒரு இளம் உயிர் பறிபோனதும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.