நாய்களுக்கு பிஸ்கட் போட்டால் அவை கடிக்காது என்று அட்வைஸ் கொடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. ஒரு பெண்மணி தெரு நாய்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். தினமும் அவற்றுக்கு உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், அந்த அன்பும் உணவும் அவரைக் காப்பாற்றவில்லை. ஒருநாள் அவர் உணவு அளித்துக் கொண்டிருந்த போதே, அதே தெரு நாய்கள் அவரைப் பதம் பார்த்துவிட்டது.
For those who give long lectures that feed biscuits to Dogs and they will never bite you.
Aunty Jee was a Dog Lover and she was feeding #StrayDogs as a daily routine. But even that did not save her from Dog bite. Now she has to take Rabies Injection. pic.twitter.com/xfojSx31iz— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) February 17, 2026
தற்போது அவர் ரேபிஸ் (Rabies) ஊசி போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். நாய்களின் குணத்தை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி. அவரைத் தெரு நாய்கள் தாக்கும் காட்சி காணொளியாக எக்ஸ் வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்
