கான்பூர் நவாப்கஞ்ச் பகுதியில், முதியவர் ஒருவர் தனது வளர்ப்பு நாயை சங்கிலியால் பிடித்துக்கொண்டு சாலையோரம் நடைப்பயிற்சி சென்றபோது, வேகமாக வந்த மாருதி எர்டிகா கார் மோதி அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தனது பாசத்திற்குரிய நாய் இறந்ததைக் கண்டு மனமுடைந்த அந்த முதியவர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து டிரைவரைத் தேடி வருகின்றனர்.
कानपुर: घर के बाहर कुत्ता टहलाते वक्त हुआ हादसा
➡कार सवार ने कुत्ते पर चढ़ाई कार, हुई मौत
➡कुत्ते पर कार चढ़ाने की घटना CCTV में कैद
➡कुत्ते के मालिक ने चालक के खिलाफ दी तहरीर
➡नवाबगंज थाना के मैनावती मार्ग की घटना#Kanpur @kanpurnagarpol pic.twitter.com/BK5tFMFwkR— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) February 17, 2026
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர், “முதியவர் நாயை சாலையின் நடுவே கூட்டிச் சென்றது தவறு, காரோட்டியின் கண்ணுக்கு நாய் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என உரிமையாளர் மீது குற்றம் சாட்டுகின்றனர். இன்னும் சிலரோ, “இது முற்றிலும் கவனக்குறைவால் நடந்த விபத்து, காரோட்டியின் மேல் தப்பில்லை” என்று வாதிடுகின்றனர். எது எப்படியோ, ஒரு வாயில்லா ஜீவனின் உயிர் போனது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
