சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சினிமாவில் அரசியலைப் புகுத்தி வெற்றி கண்ட ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான் என்று புகழாரம் சூட்டினார்.

புகழின் உச்சியில் இருந்தபோதே சினிமாவைக் கைவிட்டு முழுநேர அரசியலுக்கு வந்தவர் அவர் என்று குறிப்பிட்ட இபிஎஸ், தற்போது யாரோ சிலர் சினிமாவில் நடித்துவிட்டு தங்களை எம்.ஜி.ஆர் போல நினைத்துக் கொண்டு கனவு காண்பதாகக் கூறி, நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.