2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். “இந்திய அணியை வீழ்த்தலாம் என்று இனி கனவிலும் நினைக்க முடியாத நிலையில் தான் பாகிஸ்தான் அணி இப்போது உள்ளது” என்று அவர் மிகக் கவலையுடன் தெரிவித்துள்ளார். தோல்வியால் துவண்டு போயுள்ள பாகிஸ்தான் ரசிகர்களுக்கு, அக்தரின் இந்த ‘பகீர்’ பேச்சு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வியைக் கடுமையாகச் சாடிய அக்தர், “வாரியத்தை எப்படி நடத்துவது என்று அவருக்குத் தெரியவில்லை; உலகில் மிகப்பெரிய குற்றம் எது தெரியுமா? ஒரு தகுதியற்ற நபரிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைப்பதுதான்” என்று வெளுத்து வாங்கியுள்ளார். தகுதியற்ற மேனேஜ்மென்ட் மற்றும் வீரர்களின் சொதப்பலால் பாகிஸ்தான் கிரிக்கெட் அழிந்து வருவதாக அக்தர் கொந்தளித்துள்ள இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
