இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போர் என்றாலே மைதானத்திற்கு வெளியேயும், சமூக வலைதளங்களிலும் அனல் பறக்கும். இந்த முறை பாகிஸ்தான் ரசிகர்கள் கிளப்பிய ‘ஹைப்’ இறுதியில் அவர்களுக்கே வேடிக்கையாக முடிந்தது. போட்டி தொடங்குவதற்கு முன், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் மற்றும் தொடக்க வீரர் சாகிப்ஸாதா பர்ஹான் ஆகிய இருவரையும் அந்த நாட்டு ரசிகர்கள் ஒரு ‘ரகசிய ஆயுதமாக’ சமூக வலைதளங்களில் சித்தரித்தனர். இவர்கள் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து புதிய வரலாறு படைப்பார்கள் என பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.
32 ghante ?? 32 min. nai tikka 🫏 pic.twitter.com/CYkSwCVRJU
— Popeye⚓ (@Bhanujindal021) February 15, 2026
போட்டியின் போது மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், எல்லையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சாகிப்ஸாதா பர்ஹானைப் பார்த்து கத்தி கூச்சலிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், “பும்ரா வீசும் பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டு, 32 மணி நேரத்திற்கு ஒரு சினிமாவே எடுப்போம்” என்று அவர் வீராவேசமாகப் பேசினார்.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி மைதானத்தில் எதுவும் நடக்கவில்லை. உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாகக் கையாண்டனர். சினிமா எடுப்போம் என்று சவால் விட்ட சாகிப்ஸாதா பர்ஹானோ, பும்ராவின் பந்துவீச்சில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
View this post on Instagram
பாகிஸ்தான் தோற்றதும், அந்த ரசிகரின் பழைய வீடியோவை எடுத்து இந்திய நெட்டிசன்கள் மீம்ஸ்களால் வறுத்தெடுத்து வருகின்றனர். “32 மணி நேர சினிமா இருக்கட்டும்… 32 நிமிடம் கூட மைதானத்தில் நிற்க முடியவில்லையே?” என்றும், “பாகிஸ்தான் டாஸ் வென்றபோதே, தாங்கள் தோற்பதை முடிவு செய்துவிட்டனர்” என்றும் சமூக வலைதளங்களில் கிண்டல் பதிவுகள் குவிந்து வருகின்றன.
மேலும் பெரிய அளவில் விளம்பரம் தேடிக்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள், களத்தில் சொதப்பியது அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
