தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சரத்குமார் மற்றும் ராதிகா, சமீபத்தில் தங்களது 25-வது திருமண நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது இவர்கள் சுமார் 500 கோடி மதிப்பிலான தங்களது பிரம்மாண்ட பங்களாவை விட்டுவிட்டு, ஒரு வாடகை வீட்டிற்கு குடியேறியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுமார் 15,000 சதுர அடி கொண்ட அந்தப் பெரிய வீட்டில் கதவுகளைத் திறந்து மூடுவதற்கே அதிக நேரம் ஆவதாலும், பராமரிப்பிற்கு 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேவைப்படுவதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் தனது அண்ணனின் மறைவால் ஏற்பட்ட மனவருத்தமும், பெரிய வீட்டை நிர்வகிப்பதில் உள்ள சிரமமுமே ராதிகாவை இந்தச் சின்ன வீட்டிற்கு மாறத் தூண்டியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
சினிமாவைப் பொறுத்தவரை, ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாய்கிழவி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், சிங்கம் புலி மற்றும் முனிஷ்காந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
முதலில் பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், தற்போது சில காரணங்களால் பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் சினிமா என இரு துறைகளிலும் பிஸியாக இருக்கும் இந்தத் தம்பதிகளின் திடீர் இடமாற்றம் கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
