தேசிய விருது வென்ற முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தனது ‘பாம்பு சட்டை’ படத்திற்காகத் தமிழக அரசின் விருதினைப் பெற்றார். இந்த விருது வழங்கும் விழாவிற்குச் செல்வதற்காக, அழகாகப் புடவை கட்டி தலையில் பூ வைத்துக்கொண்டு அவர் காருக்கு வந்தபோது ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.

அவரைப் பார்த்த ரசிகர் ஒருவர், “மேடம் பூ சூப்பரா இருக்கு” என்று கூற, அதைக் கேட்டு கீர்த்தி சுரேஷ் அப்படியே ஷாக் ஆகிவிட்டார். “நான் இவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு, அழகாக ரெடியாகி வந்திருக்கேன், என்னைப் பார்த்து லுக் சூப்பரா இருக்குன்னு சொல்லாம, பூ சூப்பரா இருக்குன்னு சொல்றானே, அடப்பாவி” என்று ஜாலியாகவும், சற்று அப்செட்டாகவும் அவர் கூறிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

திருமணத்திற்குப் பிறகும் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி, கடைசியாக நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ தோல்வியடைந்த நிலையில், அடுத்து ‘கன்னிவெடி’ போன்ற படங்களை மலைபோல நம்பியிருக்கிறார்.