டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் சயீத் அஜ்மல் மற்றும் சோயப் மாலிக் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ‘ஃபீல்டிங் சொதப்பல்’ சம்பவத்தை, நமீபியா வீரர்கள் ஜான் ஃப்ரைலின்க் மற்றும் ஜேஜே ஸ்மித் அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளனர்.

மைதானத்தில் உயரே எழும்பிய பந்தைப் பிடிக்க இரு வீரர்களும் ஓடி வந்த நிலையில், ‘நீ பிடிப்பாய்’ என்று அவரும், ‘அவர் பிடிப்பார்’ என்று இவரும் நினைத்து விலகி நிற்க, பந்து இவர்கள் இருவருக்கும் இடையே தரையில் விழுந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் போட்டியில் நடந்த அதே காட்சியைப் போலவே இது இருந்ததால், கமெண்டேட்டர்கள் மற்றும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “பாகிஸ்தான் அகாடமியில் கோச்சிங் எடுத்திருப்பாரோ?” என ரசிகர்கள் கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.