பள்ளிக் குழந்தைகளுக்கோ அல்லது பெற்றோருக்கோ இதைவிடப் பயங்கரமான ஒரு சம்பவம் இருக்க முடியாது. ஒரு மூன்றாம் வகுப்பு மாணவியின் பள்ளிப் பையில் சுமார் இரண்டரை அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பதுங்கியிருந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் மாணவி தனது புத்தகப் பையைத் திறந்தபோது, உள்ளே ஏதோ அசைவதைக் கண்டு அலறியுள்ளார். அதன்பின் பையைச் சோதித்தபோது, அதற்குள் நீளமான பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் உறைந்து போயினர். அதிர்ஷ்டவசமாக அந்த மாணவிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இந்த வீடியோவைப் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது.

“>

இந்தச் சம்பவம் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மழைக் காலங்களில் வீடுகளிலும் பள்ளிகளிலும் குழந்தைகளுடைய உடமைகளைச் சோதிப்பது எவ்வளவு அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.

இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் முன்பும், பள்ளி முடிந்து வந்த பின்பும் அவர்களது பைகளைச் சரிபார்க்க வேண்டும் என்று எச்சரிக்கிறது. இந்த மயிர் கூச்செரியும் காட்சி, தற்போது இணையத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.