பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் காதலர் தினமான இன்று வெளியாகி இருக்கும் ஒரு கொலைச் செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான இளம் பெண் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த போலீசார், அந்தப் பெண்ணின் நண்பரான பிரின்ஸ் குமார் என்பவரைக் கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 9-ம் தேதியே அந்தப் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்த பிரின்ஸ், இரண்டு நாட்கள் உடலை வீட்டிலேயே வைத்திருந்துள்ளார்.
பிறகு பிணத்தை எரிக்க முயன்று, அது முடியாததால் ஒரு சூட்கேஸில் திணித்து நெடுஞ்சாலை ஓரம் வீசிச் சென்றுள்ளார். இதில் உச்சகட்ட அதிர்ச்சி என்னவென்றால், காதலியைக் கொன்ற பிறகு அந்தப் பெண்ணுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது நெஞ்சில் ‘டாட்டூ’வாகப் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார் பிரின்ஸ். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் இந்த ‘சைக்கோ’ கொலையாளியைச் சிக்க வைத்துள்ளனர்.
கொல்லப்பட்ட பெண் தனது பெற்றோரின் விருப்பத்தை மீறித் திருமணம் செய்தவர் என்பதால், அவரது உடலை வாங்கக் கூட குடும்பத்தினர் முன்வராதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
