இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ராஜஸ்தானில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் மிக எளிமையாக இருக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Niru Bishnoi  (@niru_ka_safar)

அவரது அண்ணி நீரு பிஷ்னோய் வெளியிட்ட இந்த வலைப்பதிவில் ரவி பிஷ்னோய் தனது தாயுடன் அமர்ந்து தேநீர் அருந்துவதும் குடும்பத்தினருடன் இயல்பாகப் பேசுவதும் பதிவாகியுள்ளது. ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்தபோதிலும் ஆடம்பரமின்றி பாரம்பரியமான முறையில் அவர் தனது நேரத்தைச் செலவிடுவதைக் கண்டு ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தைப் பெற்ற இவர் தற்போது டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரராக இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.