ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், ஒரு தனியார் பள்ளியின் அஜாக்கிரதையால் 11 வயது சிறுவன் காணாமல் போன சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில், அந்தச் சிறுவனைப் பள்ளி வளாகத்திற்கு வெளியே நிற்க வைத்த பள்ளி நிர்வாகம், பின்னர் கேட்டை மூடியுள்ளது. நீண்ட நேரம் வெளியே நின்ற சிறுவன், அங்கிருந்து திடீரென மாயமாகியுள்ளான். தனது குழந்தையைத் தேடி வந்த தந்தை, மகன் அங்கே இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, பள்ளிக் கதவைத் திறக்குமாறு கதறி அழுது போராடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
An 11-year-old child has gone missing in Faridabad.
The father, in a state of panic and desperation, is seen trying to get the school gate opened. According to reports, the school had made the child stand outside and then shut the gate. From there, the child disappeared.
Just… pic.twitter.com/japktxOcKp— The Nalanda Index (@Nalanda_index) February 10, 2026
ஒரு மைனர் சிறுவனைப் பாதுகாப்பற்ற முறையில் பள்ளிக்கு வெளியே நிற்க வைத்தது, பள்ளியின் ‘Duty of Care’ எனப்படும் பாதுகாப்புப் பொறுப்பை முற்றிலுமாக மீறுவதாகும். ஒரு தந்தை தனது மகனின் பாதுகாப்பு என்னவென்று தெரியாமல் தவிக்கும் அந்தத் தவிப்பு, பார்ப்பவர்களின் கண்களில் ரத்தத்தை வரவழைக்கிறது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அந்தச் சிறுவனை மீட்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கொந்தளித்துப் போய் உள்ளனர். மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட அந்தப் பள்ளி அதிகாரிகளுக்குத் தகுந்த தண்டனை கிடைத்தால் மட்டுமே, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கும்.
