சிவகங்கை வார்டு ஒன்றில் தூய்மைப்பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது என திமுக கவுன்சிலர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சாதாரண விசில் சத்தத்தைக் கேட்டுக் கூட பயப்படும் நிலையில்தான் தமிழக ஆளுங்கட்சி உள்ளதாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்பதாலேயே பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மக்கள் நலனுக்கு எதிராக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.