ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள சாமந்திபுரம் பகுதியில், 37 வயதுடைய கவிதா என்ற பெண் 17 வயது சிறுவனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட விவகாரம் கொலையில் முடிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான கவிதா, அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனுடன் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் கவிதாவின் கணவர் விஜய்க்குத் தெரியவந்து அவர் கண்டித்தபோதும், கவிதா தனது உறவைத் தொடர்ந்ததோடு, இந்த ரகசியத்தை நேரில் பார்த்துவிட்ட தனது மாமியார் நிர்மலாவைத் தீர்த்துக்கட்டவும் திட்டமிட்டார்.
அதன்படி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சிறுவன் காதலனை வரவழைத்து, மாமியாரின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றுள்ளார்.
நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். உயிருக்குப் போராடிய நிர்மலாவை மீட்ட மக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான கவிதாவைத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், பிடிபட்ட சிறுவனைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.
