நேபாள அணிக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்ற பிறகு பேசிய சாம் கரன், இந்த ஆட்டம் தனக்கு 2016-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நினைவுபடுத்தியதாகக் கூறியுள்ளார்.

அன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லோஸ் பிராத்வைட், பென் ஸ்டோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்களை விளாசி இங்கிலாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அதே போன்ற ஒரு பதற்றமான சூழல் நேபாள அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் நிலவியதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடைசி ஓவரில் நேபாள வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது, சாம் கரன் மிகச்சிறப்பாக பந்துவீசி வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

ஆறு பந்துகளையும் யார்க்கர்களாக வீசுவேன் என்றும், ஒருவேளை தோல்வி அடைந்தால் அந்தப் பழியைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் கேப்டனிடம் உறுதியளித்து அவர் இந்தச் சாதனையைச் செய்தார்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும், நேபாள வீரர்களின் சிறப்பான போராட்டத்தை சாம் கரன் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.