தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சியை வழங்கவே தலைவர் விஜய் அரசியல் வருகை தந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தவெக தயாராக இருப்பதாகவும், தமிழக மக்கள் ஒரு பெரிய மாற்றத்திற்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
திமுகவை வீழ்த்தி நல்லாட்சியைத் தரும் ஒரே சக்தி தவெக தான் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார். மேலும், இந்தத் தேர்தலில் தலைவர் விஜய்யின் முகம் மட்டுமே 234 தொகுதிகளிலும் வெற்றியைத் தேடித்தரும் முக்கிய சக்தியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அதே சமயம், வேட்பாளர்கள் அனைவரும் அவர்களின் நற்பண்புகள் மற்றும் தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், பண பலம் அல்லது ஆள் பலம் கொண்டவர்களுக்குப் பின்னால் மக்கள் செல்லமாட்டார்கள் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
புதிய கட்சியாக இருந்தாலும், மக்களின் ஆதரவுடன் திமுகவைத் தோற்கடித்து தவெக மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
