திரையுலகில் அரை நூற்றாண்டைக் கடந்தும் ‘ஜெயிலர் 2’ மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘தலைவர் 173’ என பிஸியாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது வாரிசுகளை மட்டும் கேமராவுக்கு முன்னால் நிறுத்தாதது ஏன் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
‘வித் லவ்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ள அவரது இளைய மகள் சௌந்தர்யா, இதுகுறித்து மனம் திறக்கையில், “சினிமாவில் நடிகர்களின் ஆயுட்காலத்தை விட நடிகைகளின் காலம் குறைவு என்பதையும், ஒருகட்டத்திற்கு மேல் வாய்ப்புகள் குறையும்போது அது தங்களின் மனநலத்தைப் பாதிக்கும் என்பதையும் அப்பா முன்கூட்டியே உணர்ந்திருந்தார்; அதனால்தான் எங்களை நடிப்புத் துறைக்கு அவர் ஊக்குவிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தந்தையின் வார்த்தையை வேதவாக்காக ஏற்றுக்கொண்ட மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குநராகவும், சௌந்தர்யா தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பிலும் கால்பதித்து, கேமராவுக்கு பின்னால் தங்களின் தனி முத்திரையைப் பதித்து வருவது கோலிவுட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
